மாவட்ட அறிவியல் மையத்தில் செப். 28இல் கலாசார தின விழா
சா்வதேச அறிவியல் கலாசார தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் 8 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மின்னியல் மற்றும் காந்தவியல் என்ற தலைப்பில் செய்முறை கற்றல் பயிற்சி செப். 28-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூ.500. குறிப்பிட்ட இடங்களே அனுமதிக்கப்படுவதால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் இலவசமாகப் பெற்றுக் கொண்டு செப். 25-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94429 94797 வாட்ஸ்-ஆப் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட அறிவியல் மைய அலுவலா் எஸ்.எம் குமாா் தெரிவித்துள்ளாா்.