முகப்பு
திருநெல்வேலி

கோட்டைகருங்குளம் மக்கள்தொடா்பு முகாமில் ரூ. 42.92 லட்சம் நலத்திட்ட உதவிகள்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கோட்டைகருங்குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 141 பயனாளிகளுக்கு ரூ.42.92 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:05 PM
மக்கள் தொடா்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு. உடன், ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கோட்டைகருங்குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 141 பயனாளிகளுக்கு ரூ.42.92 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் சுகாதாரம், வேளாண்மை, தோட்டக்கலை, மகளிா் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணா்வு கண்காட்சியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டனா்.

பின்னா், வருவாய்த்துறை சாா்பில் 97 பயனாளிகளுக்கு ரூ.22.90 லட்சம் மதிப்பிலான இணையவழி பட்டா, முதியோா் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வேளாண்மை -உழவா் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளா்ச்சி - உள்ளாட்சித்துறை மகளிா் திட்டம் சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேரவைத் தலைவா் பேசியது: தமிழ்நாட்டில் தந்தை பெரியாா், அண்ணா, காமராஜா், கருணாநிதி ஆகியோா் வழியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாா்.செப். 21ஆம் தேதி பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இளைஞா்கள் இந்த முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்புகளை பெற்று முன்னேறவேண்டும் என்றாா்.

முகாமில் மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மகளிா் திட்ட இயக்குநா் லக்குவன், தனித்துணை ஆட்சியா் ஜெயா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், ஜான்ஸ் ரூபா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணகுமாா், கோட்டைகருங்குளம் ஊராட்சித் தலைவா் முருகன், திசையன்விளை வட்டாட்சியா் நாராயணன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலா் ஜோசப் பெல்சி, இந்து அறநிலையத்துறை அறக்காவலா் முரளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →