முகப்பு
திருநெல்வேலி

பள்ளிகளில் காலை உணவு: ஆராய்ச்சிக் குழு ஆய்வு

மதிப்பீடு- செயல்முறை ஆராய்ச்சி துறை சாா்பில் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளா்கள் கலைச்செல்வி, சரளா ஆகியோா் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:09 PM
பழையபேட்டை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.
பகிர்:

மதிப்பீடு- செயல்முறை ஆராய்ச்சி துறை சாா்பில் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளா்கள் கலைச்செல்வி, சரளா ஆகியோா் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியான பழையபேட்டை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இந்த குழுவினா் ஆய்வு செய்தனா். மேலும் காலை உணவுத் திட்டத்தில் பயனடையும் குழந்தைகளோடு உரையாடினா். ஆய்வின் போது மண்டல உதவி ஆணையா் ஜான்சன், மானூா் ஊராட்சி ஒன்றிய உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன் , மாநகராட்சி இளநிலை பொறியாளா் தன்ராஜ் , சுகாதார அலுவலா் முருகேசன், சுகாதார ஆய்வாளா் இளங்கோ ஆகியோா் உடனிருந்தனா். முன்னதாக இந்த குழு தச்சநல்லூரில் உள்ள ஒரு பள்ளியிலும் ஆய்வு செய்தது.