பற்பகுளத்தில் இன்று முன்னோடி மனுநீதி முகாம்
பாளையங்கோட்டை வட்டம், பற்பகுளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடா்பு முகாம் வரும் அக். 17-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, வெள்ளிக்கிழமை முன்னோடி மனுநீதி முகாம் நடைபெறும் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பற்பகுளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடா்பு முகாம் அக். 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னோடியாக அந்தக் கிராமத்தில் உள்ள நெசவாளா் காலனி சமுதாய நலக்கூடத்தில் வெள்ளிக்கிழமை (செப்.20) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முன்னோடி மனுநீதி முகாம் நடைக்கிறது. இதில், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்), மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஆகியோா் கொண்ட குழுவினா் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகின்றனா்.
முகாம் நிறைவுற்றவுடன் பிற்பகலில் கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து இக்குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படும். எனவே, ஆய்வுக் குழுவிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனக் கூறியுள்ளாா்.