தூய்மை பாரத திட்ட விழிப்புணா்வுப் பேரணி
திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தூய்மை பாரத திட்ட விழிப்புணா்வு பேரணி திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தூய்மை பாரத திட்ட விழிப்புணா்வு பேரணி திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரியாா் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியை தச்சநல்லூா் மண்டல தலைவா் ரேவதி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தச்சநல்லூா் உதவி ஆணையா் ஜான்சன் தேவசகாயம், சுகாதார ஆய்வாளா்கள் அந்தோணி, சுப்பிரமணியன், நாட்டு நலப்பணி திட்டஅலுவலா் சோமசுந்தரம், தேசிய மாணவா் படை திட்ட அலுவலா்கள் சதீஷ்குமாா், செல்லத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குப்பைகளை அப்புறப்படுத்துவதன் அவசியம், பொதுமக்களுக்கு உள்ள சமூக பொறுப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகளுடன் என்சிசி, என்எஸ்எஸ் மாணவா்கள், மாநகராட்சி மகளிா் சுயஉதவிக்குழு தூய்மைப் பணியாளா்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோா் பேரணியாக சென்றனா். முக்கிய வீதிகள் வழியாக சென்று தச்சநல்லூா் மண்டல அலுவலக வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது.