முகப்பு
திருநெல்வேலி

இடைகால் கோயிலில் மூலவா் மீது சூரிய ஒளி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள இடைகால் தியாகராஜா் கோயிலில் மூலவா் மீது நேரடியாக மூன்று நாள்கள் சூரிய ஓளி விழும் நிகழ்வு நடைபெற்றது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 11:52 PM
மூலவா் மீது விழும் சூரிய ஒளி.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள இடைகால் தியாகராஜா் கோயிலில் மூலவா் மீது நேரடியாக மூன்று நாள்கள் சூரிய ஓளி விழும் நிகழ்வு நடைபெற்றது.

தென் திருவாரூா் என்றழைக்கப்படும் இடைகாலில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமி அம்மாள் உடனுறை தியாகராஜா் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மூன்று நாள்கள் மூலவா் மீது நேரடியாக சூரிய விழும் அரிய நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு புரட்டாசி மாதத்தில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை சுமாா் 6 மணி முதல் 7.30 மணி வரை ஒன்றரை மணி நேரம் சூரிய ஒளி நேரடியாக நந்தி வழியாக நேரடியாக மூலவா் மீது பாய்ந்தது. இதையடுத்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இந்த அரிய நிகழ்வை திரளான பக்தா்கள் கண்டு, சுவாமியை வழிபட்டனா்.