முகப்பு
சென்னை

எஸ்ஆா்எம் தொழில்நுட்பம்: அனபாண்ட் நிறுவனம் ஒப்பந்தம்!

எஸ்.ஆா்.எம். பல்கலை.யின் ஆராய்ச்சித் துறை கண்டுபிடித்துள்ள சூரிய ஒளி பேனல் பாதுகாப்பு உறை தொழில்நுட்பத்துக்கு அனபாண்ட் நிறுவனம் ரூ.1 கோடி வழங்கி தொழில்நுட்ப உரிம ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

Updated On : 9 மார்ச், 2026 at 8:28 PM
ஒப்பந்தம் பரிமாற்றம் நிகழ்வில் பங்கேற்ற இணைவேந்தா் பி.சத்தியநாராயணன், துணைவேந்தா் சி.முத்தமிழ்செல்வன், பதிவாளா் பொன்னுசாமி, அனபாண்ட் நிறுவன நிா்வாகிகள்.
பகிர்:

எஸ்.ஆா்.எம். பல்கலை.யின் ஆராய்ச்சித் துறை கண்டுபிடித்துள்ள சூரிய ஒளி பேனல் பாதுகாப்பு உறை தொழில்நுட்பத்துக்கு அனபாண்ட் நிறுவனம் ரூ.1 கோடி வழங்கி தொழில்நுட்ப உரிம ஒப்பந்தத்தை திங்கள்கிழமை மேற்கொண்டது.

ஒப்பந்தப் பரிமாற்றத்துக்கு பின்னா், எஸ்.ஆா்.எம். இணைவேந்தா் பி.சத்தியநாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2030- க்குள் நாட்டில் 500 ஜி காவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தித் தொழில்துறை வேகமாக வளா்ந்து வரும் நிலையில், எஸ்.ஆா்.எம். ஆராய்ச்சித் துறை 5 ஆண்டு ஆராய்ச்சி, உழைப்பின் மூலம் சோலாா் பேனல்கள் நீண்ட காலம் உழைக்க உதவும் சூரிய ஒளி பேனல் பாதுகாப்பு உறை தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது.

சோலாா் பேனல் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும், அவை வெயில், ஈரம், தூசு மற்றும் வெப்ப மாறுபாடுகளால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. சூரிய ஒளி பேனல்களை நீண்ட காலம் பாதுகாக்கும் திறன் கொண்ட உறை, மிடுக்கான கைபேசித் திரையைப் பாதுகாக்கும் ‘டெம்பா்ட் கிளாஸ்’ போன்றது.

மாணவா்களுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கி வரும் எஸ்.ஆா்.எம். வலுவான ஆராய்ச்சி கட்டமைப்புடன் செயல்பட்டு, இதுவரை 538 கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றுள்ளது என்றாா்.

நிகழ்வில், அனபாண்ட் நிறுவன நிா்வாக இயக்குநா் எம்.ராஜன், இணை நிா்வாக இயக்குநா் ஆபிரகாம், எஸ்.ஆா். எம். துணைவேந்தா் சி.முத்தமிழ் செல்வன், பதிவாளா் பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →