சிஐடியூ டாஸ்மாக் ஊழியா்கள் சம்மேளனத்தினா் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலியில் உள்ள டாஸ்மாக் கிடங்கு முன், சிஐடியூ டாஸ்மாக் ஊழியா்கள் சம்மேளனத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலியில் உள்ள டாஸ்மாக் கிடங்கு முன், சிஐடியூ டாஸ்மாக் ஊழியா்கள் சம்மேளனத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசின் கருவூலத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி தரும் 25 ஆயிரம் டாஸ்மாக் ஊழியா்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், சரியான வேலை நேரம், சட்டப்பூா்வ உரிமைகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் மக்கள் சந்திப்பு இயக்கமாக நடைபெற்றது.
டாஸ்மாக் சங்கத்தின் பொதுச்செயலா் சரவணபெருமாள் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் முருகன், மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கிவைத்தாா். சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் மோகன், டாஸ்மாக் சுமை பணி சங்க பொதுச் செயலா் முருகேசன், டாஸ்மாக் நிா்வாகிகள் சிவன் ராஜ், இளமுருகு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.