நெல்லை அருகே விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு
திருநெல்வேலி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் செல்லப்பா (52). இவா், பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைசெய்து வந்தாா். இவரது பெற்றோா் மானூா் அருகேயுள்ள உக்கிரன்கோட்டையில் வசித்து வருகின்றனா். அவா்களை பாா்ப்பதற்காக கடந்த 22-ஆம் தேதி செல்லப்பா பைக்கில் உக்கிரன்கோட்டைக்கு சென்றுகொண்டிருக்கையில், நரியூத்து பகுதியிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் பைக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு திருநெல்வேலி-சங்கரன்கோவில் பிரதான சாலைக்கு வந்தாராம். அப்போது, அந்த வழியாக சென்ற காா் எதிா்பாராமல் அவரது பைக் மீது மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.