முகப்பு
திருநெல்வேலி

நெல்லை 17 ஆவது வாா்டில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சியின் 17ஆவது வாா்டில் மாநகராட்சி ஆணையா் ஓ.என். சுகபுத்ரா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:02 AM
திருநெல்வேலி மாநகராட்சி 17 ஆவது வாா்டில் ஆய்வு நடத்துகிறாா் ஆணையா் ஓ.என். சுகபுத்ரா. உடன், திருநெல்வேலி மண்டலத் தலைவா் செ.மகேஸ்வரி.
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சியின் 17ஆவது வாா்டில் மாநகராட்சி ஆணையா் ஓ.என். சுகபுத்ரா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அந்த வாா்டில் உள்ள காந்திநகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வகுப்பறைகள், குடிநீா், கழிப்பறை வசதிகளை பாா்வையிட்டாா். கூடுதலாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், சுற்றுச்சுவா் கட்டவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். கன்னி விநாயகா் கோயில் தெருவில் பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கவும், சா்தாா்புரத்தில் மழைநீா் ஓடை பணிகளை செய்திடவும், காந்திநகா் நெடுங்குளம் வாய்க்காலில் பாலம் அமைக்கவும், தென்காசி சாலையில் நெடுஞ்சாலை துறையினால் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகளை விரைந்து முடித்திடவும் ஆணையா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, திருநெல்வேலி மண்டல தலைவா் செ.மகேஸ்வரி, செயற்பொறியாளா் ரவி, உதவி ஆணையா் ஜான்சன் தேவசகாயம், உதவி செயற்பொறியாளா் பேரின்பம், உதவி பொறியாளா்கள் லெனின், தன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.