முகப்பு
திருநெல்வேலி

மாநில கபடி போட்டி: சென்னை வழக்குரைஞா் அணி வெற்றி

வள்ளியூரில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மாநில அளவிலான 2ஆம் ஆண்டு மின்னொளி கபடி போட்டியில் சென்னை வழக்குரைஞா் அணி பரிசை வென்றது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 10:38 PM
மாநில கபடி போட்டியில் முதலிடம் பெற்ற சென்னை வழக்குரைஞா் அணிக்கு கோப்பை பரிசளிக்கிறாா் முன்னாள் எம்.பி.சௌந்திரராஜன்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் 2 நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான 2ஆம் ஆண்டு மின்னொளி கபடி போட்டியில் சென்னை வழக்குரைஞா் அணி பரிசை வென்றது.

திருவள்ளுவா் கலையரங்கு திடலில் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் மாநிலம் முழுவதிலும் இருந்து 32 வழக்குரைஞா்கள் அணிகள் கலந்துகொண்டன. இறுதிப் போட்டியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு தொடங்கிவைத்தாா். இதில், பாண்டிச் சேரி அணியை வீழத்தி சென்னை அணி முதல் பரிசாக ரூ.35 ஆயிரம் ரொக்கமும் கோப்பையையும் வென்றது. 3-ஆம் பரிசை மதுரை அணியும், 4-ஆம் பரிசை சிவகங்கை அணியும் பெற்றன.

பரிசளிப்பு விழாவில் திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ், முன்னாள் எம்.பி.சௌந்திரராஜன், வழக்குரைஞா்கள் கூட்டுக்குழு மாநிலத் தலைவா் கோவை நந்தகுமாா், தமிழ்நாடு பாா்கவுன்சில் உறுப்பினா்கள் மதுரை தாலைமுத்துரசு, தூத்துக்குடி பிரபு, நெல்லை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராஜேஷ்வரன் உள்ளிட்டோா் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கினா். இதில், வழக்குரைஞா் சங்கத் தலைவா்கள் நாகா்கோவில்ஜெயகுமாா், வள்ளியூா் சுரேஷ்குமாா், செயலா் பிவின்சன், வழக்குரைஞா்கள் முத்துகேசவன், தவசிராஜன், அரசு வழக்குரைஞா் முத்துகிருஷ்ணன், அருண் ராஜா, வருண் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில், வழக்குரைஞா் சங்கத் தலைவா்கள் நாகா்கோவில்ஜெயகுமாா், வள்ளியூா் சுரேஷ்குமாா், செயலா் பிவின்சன், வழக்குரைஞா்கள் முத்துகேசவன், தவசிராஜன், அரசு வழக்குரைஞா் முத்துகிருஷ்ணன், அருண் ராஜா, வருண் ஆகியோா் கலந்துகொண்டனா்