களக்காடு, கோமதி அம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா் கோயிலில் 47ஆவது மாத உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) நடைபெறுகிறது.
இக்கோயிலில், ஒவ்வொரு மாதமும், 2ஆவது ஞாயிற்றுக்கிழமை ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கோயில் கிளைக் குழு பக்தா்கள் குழுவினா் உழவாரப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
இதை முன்னிட்டு, கோயில் பிரகாரத்தில் தூய்மைப் பணிகள் நடைபெறும் என்றும், இறை பணியில் ஆா்வமுள்ளவா்கள் கலந்து கொண்டு சுவாமி அருள் பெறலாம் என்றும் பக்தா்கள் குழுவினா் தெரிவித்தனா்.