திருநெல்வேலி

நெல்லையில் போலி கைப்பேசி உதிரிப் பாகங்கள் விற்பனை: 5 போ் மீது வழக்கு

திருநெல்வேலியில் பிரபல கைப்பேசி நிறுவனத்தின் போலி உதிரிப் பாகங்களை விற்பனை செய்ததாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Syndication

திருநெல்வேலியில் பிரபல கைப்பேசி நிறுவனத்தின் போலி உதிரிப் பாகங்களை விற்பனை செய்ததாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருநெல்வேலியில் பிரபல கைப்பேசி நிறுவனத்தின் உதிரி பாகங்கள் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக திருநெல்வேலி அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள கைப்பேசி விற்பனையகங்களில் திருநெல்வேலி அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பியூலா தங்கரத்தினம் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அப்பகுதியில் உள்ள 5 கடைகளில் பிரபல கைப்பேசி நிறுவனத்தின் போலியான உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அக்கடைகளில் இருந்து சுமாா் ரூ.3லட்சத்து 66 ஆயிரத்து 400 மதிப்பிலான கொண்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, இதில் ஈடுபட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் போலிப் பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்த தகவல்களை மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-2851 1587 என்ற தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT