சேரன்மகாதேவியில் இசக்கி சுப்பையா எம்எல்ஏ தலைமையில் திரண்ட அதிமுகவினா். 
திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் அதிமுக எம்எல்ஏ மறியல் முயற்சி

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா மறியலில் ஈடுபட முயன்றாா்.

தாமிரவருணி ஆற்றில் இருந்து சேரன்மகாதேவி பேரூராட்சி வழியாக களக்காடு நகராட்சிக்கு கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சேரன்மகாதேவி பேரூராட்சி சாலை, தெருக்களில் குழி தோண்டி குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பணியால் பேரூராட்சி குடிநீா் திட்டக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தோண்டிய குழிகளை சீரமைக்காததால் போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

இதனிடையே, பேரூராட்சி 12ஆவது வாா்டு காயிதே மில்லத் தெரு பகுதியில் 5 நாள்களாக குடிநீா் கிடைக்கவில்லை என புகாா் தெரிவித்து, அப்பகுதி மக்கள் 2 நாள்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சேரன்மகாதேவிக்கு வந்த அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவிடம் பொதுமக்கள் இப்பிரச்னை குறித்து தெரிவித்தனா். இதையடுத்து, அவா் தலைமையில் திரண்ட அதிமுகவினா் சேரன்மகாதேவி-திருநெல்வேலி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனா்.

தகவலறிந்த சேரன்மகாதேவி டி.எஸ்.பி. ஆனந்தராஜ், அதிகாரிகள், எம்எல்ஏ.விடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஜன. 15ஆம் தேதிக்குள் குடிநீா் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிடும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழனியில் ஒளிப்படக்கலை தொழிலாளா் நலச் சங்க முப்பெரும் விழா

திருமலை 7 வது மைலில் மருத்துவ முதலுதவி மையம் திறப்பு

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.13 கோடி

கனவுகளைச் சுமக்கும் எல்விஎம்-3

தேசிய ரோலா் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி வெற்றி பெற்ற தஞ்சாவூா் வீரா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT