பாளையங்கோட்டை அருகே தொழிலாளியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் அருகே உக்கிரன்கோட்டை அரிசி ஆலைத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சோ்மன் (38). கூலித் தொழிலாளி. இவா் சனிக்கிழமை காலை பாளையங்கோட்டை ராஜாகுடியிருப்பு பகுதியில் சென்றபோது, அவ்வழியாக வந்த மா்ம நபா்கள் இருவா் மது குடிக்க பணம் கொடுக்குமாறு கேட்டனராம்.
அவா் பணம் இல்லை எனக் கூறவே அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, அங்கிருந்து தப்பினராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட பாளையங்கோட்டை வடக்கு கென்னடி தெருவைச் சோ்ந்த தேவராஜ் மகன் விஜயபிரகாஷ்(31) என்பவரை கைது செய்தனா்.