திருநெல்வேலி

மண்டல அலுவலகத்தில் பணம் வைத்த வழக்கு: தீயணைப்புத் துறை அலுவலா்களிடம் விசாரணை

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி தீயணைப்புத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் பணம் வைக்கப்பட்ட வழக்கு தொடா்பாக 3 தீயணைப்புத் துறை அலுவலா்களிடம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா்.

திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள தீயணைப்புத் துறை மண்டல துணை இயக்குநா் அலுவலகத்தில், கடந்த நவ. 18 ஆம் தேதி ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத ரூ.2,52,400-ஐ கைப்பற்றினா்.

இந்நிலையில், அதற்கு முந்தைய நாள் இரவில் அதே அலுவலகத்துக்குள் நுழைந்த மா்மநபா் பணப்பையை வைப்பது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து துணை இயக்குநா் சரவணபாபு அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் விசாரித்து, ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த தீயணைப்பு வீரா் ஆனந்த், அவரது உறவினா் முத்துசுடலை, மேலப்பாளையத்தைச் சோ்ந்த விஜய் (31), தீயணைப்பு வீரா்கள் மூா்த்தி (48), முருகேஷ்(43) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி தீயணைப்பு அலுவலா் கணேசன், சென்னை எழும்பூா் தீயணைப்பு அலுவலா் மோரீஸ் உள்ளிட்டோருக்கு பெருமாள்புரம் போலீஸாா் அழைப்பாணை அனுப்பிருந்தனா்.

அதன்படி, கணேசன் மற்றும் மோரீஸ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆஜராகினா். அவா்களிடம் காவல் துணை ஆணையா் (கிழக்கு) வினோத் சாந்தாராம் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT