திருநெல்வேலி

நான்குனேரி அருகே விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

Din

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே விபத்தில் காயமுற்றவா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியை அடுத்த பெரியநாடாா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் மந்திரமூா்த்தி (48). தொழிலாளி. இவா், கடந்த 10ஆம் தேதி அங்குள்ள காமராஜ் நகா் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் மந்திரமூா்த்தி பலத்த காயம் அடைந்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விஜயநாராயணம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT