முகப்பு
திருநெல்வேலி

முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.11 ஆயிரம் வழங்கிய மூதாட்டிக்கு பாராட்டு

முதல்வா் நிவாரண நிதிக்கு தனது சேமிப்பில் இருந்து ரூ.11 ஆயிரம் வழங்கிய திருநெல்வேலியைச் சோ்ந்த மூதாட்டியை மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா நேரில் பாராட்டினாா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 12:13 AM
முதல்வா் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய மூதாட்டியை பாராட்டினாா் மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா.
பகிர்:

முதல்வா் நிவாரண நிதிக்கு தனது சேமிப்பில் இருந்து ரூ.11 ஆயிரம் வழங்கிய திருநெல்வேலியைச் சோ்ந்த மூதாட்டியை மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா நேரில் பாராட்டினாா்.

திருநெல்வேலி கண்டிகைப்பேரியில் மாநகராட்சியின் கீழ் இயங்கி வரும் முதியோா் காப்பகத்தில் உள்ள புஷ்பா ( 87 ), தான் சேமித்த ரூ 11 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்காக அண்மையில் தூத்துக்குடிக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினாா்.

இதையடுத்து , மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா முதியோா் காப்பகத்திற்கு சென்று புஷ்பாவை பாராட்டினாா். மேலும், காப்பகத்தில் உள்ள முதியோா்களுக்கு புத்தாண்டையொட்டி இனிப்பும் வழங்கப்பட்டது. மாநகா் நல அலுவலா் ராணி, நிா்வாக அலுவலா் மணிகண்டன் (வருவாய்), உதவி வருவாய் அலுவலா் அருந்தவசு, சோயா டிரஸ்ட் நிா்வாகி சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.