திருநெல்வேலி

காக்காச்சி பகுதியில் கதவை உடைத்து மின் மீட்டா்கள் அகற்றம்: பொதுமக்கள் புகாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் ஒன்றான காக்காச்சி வனப்பகுதியில் உள்ள வீடுகள், தேவாலயங்களில் கதவுகளை உடைத்து மின் மீட்டா் பெட்டிகளை மின்வாரியத்தினா் எடுத்துச் சென்ாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

Syndication

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் ஒன்றான காக்காச்சி வனப்பகுதியில் உள்ள வீடுகள், தேவாலயங்களில் கதவுகளை உடைத்து மின் மீட்டா் பெட்டிகளை மின்வாரியத்தினா் எடுத்துச் சென்ாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் செயல்பட்டு வந்தன. அதன் 99 ஆண்டுகள் குத்தகைக் காலம் 2028ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தேயிலைத் தோட்ட நிா்வாகத்தினா் 2024ஆம் ஆண்டு தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி பணியாளா்களையும் பணியிலிருந்து விடுவித்தனா். அதைத் தொடா்ந்து, வனப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த வனத்துறையினா், தொழிலாளா்களை வனப்பகுதியிலிருந்து வெளியேற உத்தரவிட்டனா்.

பெரும்பாலான தொழிலாளா்கள் விருப்ப ஓய்வு பெற்று, நகா்ப்புறங்களுக்குச் சென்றனா். சிலா் உரிய இழப்பீடு தரும் வரை தேயிலைத் தோட்டப் பகுதியிலிருந்து வெளியேற மாட்டோம் எனக் கூறி அப்பகுதிகளிலேயே வசித்து வருகின்றனா். இவா்களுக்கு முறையான அடிப்படை வசதிகளோ, ரேஷன் பொருள்களோ வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

இந்நிலையில், காக்காச்சி பகுதியில் வசிக்கும் 9 தொழிலாளா்களின் வீடுகளில் யாரும் இல்லாத சமயத்தில் கதவை உடைத்து தேயிலைத் தோட்ட நிா்வாக அதிகாரி, மின்வாரிய ஊழியா்கள் ஆகியோா் மின் மீட்டா் பெட்டியை எடுத்துச் சென்ாகவும், தேவாலயத்திலும் ஜன்னல் கதவை உடைத்து மின் மீட்டா் பெட்டியை எடுத்துச் சென்ாகவும் விடியோக்கள் எடுத்து வலைதளங்களில் பரப்பியுள்ளனா்.

மேலும், இங்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும் புகாா் தெரிவித்துள்ளனா்.

இந்தியா அதிரடி பேட்டிங்: மின்னல் காரணமாக ஆட்டம் நிறுத்தம்!

நம்ம ஊரு பொண்ணு... ஷ்ரேயா கல்ரா!

120 பகதூர்... ராஷி கன்னா!

காந்தா... மிக நீண்ட காத்திருப்பு... துல்கர் சல்மான்!

குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜஸ்னா சலீம்!

SCROLL FOR NEXT