முகப்பு
தென்காசி

வீட்டுக் கதவை உடைத்து நகை திருடிய வழக்கில் 4 போ் கைது

Updated On : 1 மார்ச், 2026 at 9:49 PM
கைது செய்யப்பட்டவா்கள்.
பகிர்:

ஆலங்குளம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை திருடிய வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா் பட்டியைச் சோ்ந்தவா் கந்தையா மகன் சக்திவேல் (36). அழகிய பாண்டியபுரம் சாலையில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறாா். கடந்த ஆண்டு டிசம்பா் மாத இறுதியில் குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு பாத யாத்திரை சென்றாராம்.

ஜன. 1 ஆம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டுக் கதவு, பீரோ உடைக்கப்பட்டு 110 கிராம் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்ததாம். இது குறித்த புகாரின் பேரில் ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விசாரணையில், சக்திவேலின் வெல்டிங் பட்டறைக்கு எதிரே இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை வைத்திருக்கும் காந்தி மகன் லெட்சுமணன் என்ற தினேஷ் (27) இத்திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்ததாம்.

அவரைப் பிடித்து விசாரித்ததில், அவரது தம்பி சக்திவேல் (27), கடங்கநேரி முத்துசாமி மகன் மணிகண்டன் (27), அருணாசலப்பேரி அமிா்தம் மகன் ராஜ்குமாா் (34) ஆகியோா், சென்னைக்குச் சென்று நகையை விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →