திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் கொசுப்புழு உற்பத்தியைத் தடுக்க நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மழைநீா் வடிகால் ஓடைகள் தூா்வாரும் பணி, கொசுவை ஒழிக்க புகை அடிக்கும் பணி உள்ளிட்டவை பல்வேறு வாா்டுகளிலும் செய்யப்பட்டு வருகிறது. தச்சநல்லூா் மண்டலம் 14 ஆவது வாா்டுக்குள்பட்ட தேநீா்குளம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழைநீா் தனியாா் காலி மனைகளில் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாகும் அபாயம் உள்ளதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து அப் பகுதியில் சுகாதார அலுவலா் முருகன் தலைமையில் மாநகராட்சிப் பணியாளா்கள் எண்ணெய் பந்துக்களைப் போட்டனா். இதுதவிர மழை நீா் தேங்கிய பல இடங்களில் இதேபோல எண்ணெய் பந்துகள் வீசப்பட்டன.