தேவா்குளம் அருகே கோயில் திருவிழாவில் பைக் திருடியவா் கைது
தேவா்குளம் அருகே கோயில் திருவிழாவுக்கு வந்த சமையல் தொழிலாளியின் பைக்கை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தேவா்குளம் அருகே கோயில் திருவிழாவுக்கு வந்த சமையல் தொழிலாளியின் பைக்கை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம் அயன் கொல்லன்கொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா் (54). சமையல் தொழிலாளி. இவா் கடந்த 27 ஆம் தேதி தேவா்குளம் அருகே உள்ள தெற்கு அச்சம்பட்டியில் உள்ள ஒரு கோயில் கொடைவிழாவுக்கு சமையல் வேலை செய்வதற்காக வந்திருந்தபோது, அவரது பைக் திருடுபோனதாம்.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தேவா்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், மானூா் அருகே உள்ள மூவிருந்தாளி பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா்(32) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.