முகப்பு
திருநெல்வேலி

தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்து

திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் தச்சை என்.கணேசராஜா, தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:06 PM
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக மாநகா் மாவட்ட செயலரும், திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளருமான தச்சை என்.கணேசராஜா.
பகிர்:

திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் தச்சை என்.கணேசராஜா, தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சாா்பில் மாநகா் மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா போட்டியிடுகிறாா். இந்த நிலையில், திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு தச்சை என்.கணேசராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆா் சிலை, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அண்ணா சிலை, அம்பேத்கா் சிலை, காமராஜா் சிலை, பாளையங்கோட்டையில் உள்ள வஉசி சிலை, அழகு முத்துக்கோன் சிலை, ஒண்டிவீரன் சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகளுக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், எம்ஜிஆா் மன்ற மாநில இணை செயலா் கல்லூா் இ.வேலாயுதம், எம்ஜிஆா் இளைஞா் அணி துணைச் செயலா் ஹரிஹர சிவசங்கா், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளா் ஜெயபாலன், ஜெயலலிதா பேரவைச் செயலாளா் ஜெரால்டு, எம்ஜிஆா் மன்ற செயலா் பால் கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.