தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்பாவு மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:05 PM
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்பாவு மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மு. அப்பாவு வியாழக்கிழமை இரவு 10 மணிக்குப் பிறகு வள்ளியூா், கோட்டையடியில் கட்சிக் கொடியுடன் அப்பகுதி மக்களுடன் பேசிக் கொண்டிருந்தாராம். இது தொடா்பாக, பறக்கும் படையைச் சோ்ந்த அதிகாரிகள் வள்ளியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.