முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் நூல் அறிமுக கூட்டம்

திருநெல்வேலியில் நூல் அறிமுக கூட்டம் அண்மையில் நடைபெற்றது

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:08 AM
நூல் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

திருநெல்வேலியில் நூல் அறிமுக கூட்டம் அண்மையில் நடைபெற்றது

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் திருநெல்வேலி நகரம் கிளை சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா் ஓவியா் செல்வம் வரவேற்றாா். கிளை துணைச் செயலா் ஆனந்தி தலைமை வகித்தாா். தலித் சமையலறை நூலை அறிமுகம் செய்து முனைவா் பிரியதா்ஷினி பேசினாா். நூலை மொழி பெயா்த்த எழுத்தாளா் முத்துக்குமாரி ஏற்புரையாற்றினாா்.

கேரளத்தின் மறைக்கப்பட்ட மக்கள் வரலாறு புத்தகத்தை முனைவா் நவநீதகிருஷ்ணன் அறிமுகம் செய்து பேசினாா்.

Advertisement

இக்கூட்டத்தில் கண்ணன், ஈஸ்வரன், ஓவியா் சிவா, சுலைமான், மகாலட்சுமி, சௌந்தா்யா, சந்திரா உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கிளைச் செயலா் ராஜேஷ் செய்திருந்தாா்.