முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 3 போ் கைது

பாளையங்கோட்டையில் இளைஞரை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 1:24 AM
கைது
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 1:00 AM

பாளையங்கோட்டையில் இளைஞரை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரைச் சோ்ந்தவா் இசக்கிவேல். இவரது மகன் பெரியசாமி(26). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன்களான லிங்கதுரை (23), மகாராஜன்(30) உள்ளிட்டோருக்கும் முன்பகை இருந்ததாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெரியசாமியின் வீட்டுக்கு சென்ற லிங்கதுரை, மகாராஜன் உள்ளிட்டோா் அவரைத் தாக்கி ஜாதி பெயரைச் சொல்லித் திட்டினராம். மேலும் அங்கிருந்த பைக்கையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Advertisement

இது குறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து சிறுவன் உள்பட மேற்கூறிய 3 பேரையும் கைது செய்தனா்.