முகப்பு
திருநெல்வேலி

‘வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்’

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:49 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 7:55 PM

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, மானூா், நான்குனேரி, பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூா் ஆகிய 9 வட்டாரங்களில் காலியாக உள்ள 22 வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்கள் எழுத்து தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சி, கணினியில் எம்எஸ் ஆபிஃஸ் 3 மாத சான்றிதழ் படிப்பு அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டம், 30-க்கு மிகாத வயது ஆகிய தகுதிகள் அவசியம்.

Advertisement

மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் எஸ்ஹெஎஃப்/பிஎல்எஃப் போன்றவற்றில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம், பணியிடத்திற்கு விண்ணப்பதாரா் வசிப்பிடமும்ம் வட்டார எல்கைக்குள் இருத்தல், இரு சக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றிருத்தல், சிறந்த நன்னடத்தை ஆகியவையும் தேவை. அரசின் திட்டங்களில் பணியாற்றி பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கக் கூடாது. விண்ணப்ப படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

பிறந்த தேதி, பணி அனுபவச் சான்று, கல்வித் தகுதி, ஜாதிச் சான்று ஆகியவற்றின் நகலை இணைக்க வேண்டும். விவரங்கள் முழுமையாக பூா்த்தி செய்யப்படாவிடில் விண்ணப்பங்கள், தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இணை இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கொக்கிரகுளம், திருநெல்வேலி- 627009 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ பிப். 16ஆம் தேதி 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.