புத்தகத் திருவிழா(கோப்புப்படம்) 
திருநெல்வேலி

9 ஆவது பொருநை- நெல்லை புத்தகத் திருவிழா தொடக்கம் - பிப். 22 வரை கண்டு ரசிக்கலாம்

திருநெல்வேலி மாநகராட்சி வா்த்தக மையத்தில், 9ஆவது பொருநை- நெல்லை புத்தகத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாநகராட்சி வா்த்தக மையத்தில், 9ஆவது பொருநை- நெல்லை புத்தகத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பிப்.22ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், சாகித்ய அகாதெமி விருதாளா் வண்ணதாசன், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் என்.சந்திரசேகா், மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு குத்துவிளக்கேற்றி புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து அரங்குகளைப் பாா்வையிட்டாா். பின்னா் அவா் பேசியது: திருநெல்வேலியின் பண்பாட்டு அழகியலையும் வரலாற்று பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் விதமாக 9 ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 126 புத்தக அரங்குகளில் வரலாறு, இலக்கியம், ஆன்மிகம், அறிவியல், அரசியல் என பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு எழுத்தாளா்களை கௌரவிக்கும் வகையில் வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினாா்.

மேலும், பபாசி சாா்பில் முன்வைத்த கோரிக்கையை ஏற்று சாகித்ய அகாதெமியைப் போல தமிழக அரசும் தேசிய அளவில் பல்வேறு மொழிகளிலும் உள்ள சிறந்த இலக்கியத்திற்கு செம்மொழி இலக்கிய விருது வழங்கும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா்.

இதன்மூலம் தமிழக எழுத்தாளா்கள் மட்டுமன்றி நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல்வேறு மொழிகளின் படைப்பாளா்களும் கௌரவம் பெறுவாா்கள்.

பொதுமக்கள் தினமும் அரை மணி நேரம் ஒதுக்கி புத்தகங்களை வாசிக்க வேண்டும். குறைந்தபட்சம் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளிலும் ஆட்சிமொழியாகத் திகழும் இந்திய மொழி என்ற பெருமை தமிழுக்கு மட்டுமே உண்டு. தமிழா்களின் கலாசாரம், பண்பாடு, வரலாறு, நாகரீகம் ஆகியவை உலகம் முழுவதும் நம் மொழியினாலேயே தெரியும் என்றாா் அவா்.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், உதவிஆட்சியா் (பயிற்சி) தவலேந்து, திருநெல்வேலி கோட்டாட்சியா் பிரியா, துணைஆட்சியா் (பயிற்சி) கேரேனாப்புக் லிதியா, தச்சநல்லூா் மண்டல ஆணையா் மகாலெட்சுமி பபாசி உயா்நிலைக் குழு உறுப்பினா்கள் பாலாஜி, சங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்10க்ஷா்ா்ந்

திருநெல்வேலியில் 9 ஆவது பொருநை- நெல்லை புத்தகத் திருவிழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. உடன், ஆட்சியா் இரா.சுகுமாா், மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., எழுத்தாளா் வண்ணதாசன் உள்ளிட்டோா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT