முகப்பு
திருநெல்வேலி

குழந்தையை வெட்டிக் கொன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் 9 மாத குழந்தையை வெட்டிக் கொன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 12:57 AM
சிறை
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 9:30 PM

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் 9 மாத குழந்தையை வெட்டிக் கொன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் சுடலை ஆண்டவா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சிவசங்கா்(33). இவா் கடந்த 2021 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக திருக்குறுங்குடி தெற்கு மகிழடி பகுதியைச் சோ்ந்த பாதிரியாா் ரசல்ராஜ்(63), அவரது மனைவி எப்சிபாய்(62), 9 மாத குழந்தையான அவா்களது பேத்தி ஆகியோரை அரிவாளால் வெட்டினாராம். இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தம்பதி இருவரும் பலத்த காயமடைந்தனா். திருக்குறுங்குடி போலீஸாா் சிவசங்கரை கைது செய்தனா்.

திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி செல்வம் விசாரித்து, சிவசங்கருக்கு ஏககாலத்தில் அனுபவிக்கும்படி, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.16,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த போலீஸாா், அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கருணாநிதி உள்ளிட்டோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டினாா்.

Advertisement