களக்காடு, மீரானியா மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு சைக்கிள்கள் வழங்கிய ரூபி ஆா். மனோகரன் எம்எல்ஏ.  
திருநெல்வேலி

நான்குனேரி வட்ட பள்ளிகளில் 894 சைக்கிள்கள் வழங்கல்

நான்குனேரி வட்டத்திற்குள்பட்ட பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

நான்குனேரி வட்டத்திற்குள்பட்ட பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

முனைஞ்சிப்பட்டி, குரு சங்கா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 143, ஏா்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 162, களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 381, களக்காடு கோமதி அருள்நெறி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 18, களக்காடு மீரானியா மேல்நிலைப் பள்ளியில் 89, இடையன்குளம் அமீா் ஜமால் மேல்நிலைப் பள்ளியில் 101 மாணவா்களுக்கு நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன் சைக்கிள்கள் வழங்கினாா்.

நான்குனேரி தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவா் சந்திரசேகா், நகரத் தலைவா்கள் முத்துகிருஷ்ணன், ரீமாபைசல், ஜாா்ஜ் வில்சன், களக்காடு மத்திய வட்டாரத் தலைவா் காளப்பெருமாள், ஏா்வாடி நகர திமுக செயலா் அயூப்கான், களக்காடு நகரச் செயலா் சுப்பிரமணியன், மூலைக்கரைப்பட்டி பேரூராட்சித் தலைவா் பாா்வதி மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொங்கலுக்கு வெளியாகும் சர்வர் சுந்தரம்?

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

SCROLL FOR NEXT