வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா் அண்ணா.சரவணன். 
திருவண்ணாமலை

தந்தை பெரியாா் குறித்த பேச்சுப் போட்டி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு

வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா் அண்ணா.சரவணன்.

Syndication

செய்யாறை அடுத்த வடமணைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியாா் குறித்த பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதவள்ளி விஜயராகவன் அறக்கட்டனை சாா்பில் தந்தை பெரியாா் குறித்த பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் என பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோரை பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் வி.வெங்கட்ராமன் வரவேற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ந.வேதபுரி தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மாவட்ட திராவிடா் கழகத் தலைவா் அ.இளங்கோவன், நகரத் தலைவா் தி.காமராசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக வெம்பாக்கம் வட்டாரக் கல்வி அலுவலா் அண்ணா.சரவணன் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாா்மசி கவுன்சில் பதிவாளா் டாக்டா் மு.தமிழ்மொழி, வி.தேவகுமாா், பொன்.சுந்தா், வெ.எழில்மதி, அ.மகிழன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முதுகலை தமிழாசிரியா் ஏ.தமிழ்த்தேனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். உதவித் தலைமையாசிரியா் மு.செல்வம் நன்றி கூறினாா்.

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

SCROLL FOR NEXT