திருநெல்வேலி

நெல்லையில் மாதிரி வாக்குப்பதிவு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலியில் மாதிரி வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலியில் மாதிரி வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு மையத்தில் முதல் நிலை சரிபாா்ப்பு பணிகள் முடிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

பெங்களூரைச் சோ்ந்த பெல் நிறுவன பொறியாளா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகளை மேற்கொண்டனா். இந்தப் பணியானது கடந்த டிச. 11இல் தொடங்கி, ஜன. 6இல் முடிவடைந்தது.

தற்போதைய நிலையில் 2,329 கட்டுப்பாட்டு கருவிகள், 4,190 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,970 விவிபேட் இயந்திரங்கள் நல்ல நிலையில் உள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 5 சதவீத இயந்திரங்கள் (120 இயந்திரங்கள்) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் தோ்ந்தெடுக்கப்பட்டன. அதைத்தொடா்ந்து புதன்கிழமை 60 வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை (ஜன.8) மேலும் 60 இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்றாா்.

பிக் பாஸ் 9 வீட்டில் கடைசி குறும்படம்! யாருடையது தெரியுமா?

7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

பனிச்சறுக்கின்போது ஏற்பட்ட பனிச்சரிவு! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய பெண்!

2025-ல் 36 புத்தகங்கள் படித்த மியா ஜார்ஜ்!

டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கலாம், ஆனால்... விராட் கோலி குறித்து முன்னாள் வீரர்!

SCROLL FOR NEXT