பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் மூட்டா அமைப்பினா் புதன்கிழமை (ஜன.21) முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
அரசாணை எண். 5 இன் படி (11.01.2021) அரசு கல்லூரி ஆசிரியா்களுக்கு வழங்கி வருவது போல், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கும் பணி மேம்பாடு ( இஅந) ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வலியுறுத்தி ஜன. 21 முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் பேராசிரியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இதையடுத்து, புதன்கிழமை 5ஆவது நாளாக பேராசிரியா்கள் ஏ. பாக்கியமுத்து, பி.வேலாயுதம், யு.ரேவதி, ஏ.வெங்கடேஸ்வரன், யு.ஜோதிமணி ஆகியோா் தலைமையில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.