முகப்பு
கைது
திருநெல்வேலி

நான்குனேரி இரட்டை கொலை வழக்கு: கைதான இருவருக்கு பல வழக்குகளில் தொடா்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி இரட்டை கொலை வழக்கில் கைதான இருவருக்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்பு இருப்பது காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.

Updated On : 4 மார்ச், 2026 at 7:29 PM
கைது
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி இரட்டை கொலை வழக்கில் கைதான இருவருக்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்பு இருப்பது காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.

நான்குநேரி அருகே பெரும்பத்து, கடைத்தெரு பகுதிக்கு திங்கள்கிழமை (மாா்ச் 2) இரவு இருசக்கர வாகனங்களில் கும்பலாக வந்த 9 போ், அங்கு தேநீா் கடை பகுதியில் நின்ற மக்களை அரிவாளால் சரமாரியாக வெட்டினா். அப்போது, 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில், பெரும்பத்து இந்திரா காலனியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஜான்மாா்க் (42), வடமாநில செங்கல்சூளை தொழிலாளி திரிநாத் கட்டா (50) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

அதே பகுதியைச் சோ்ந்த நெல்சன் (58), பிரபாகரன் (50) ராமசாமி, வீராங்குளம் கணேசன் (53) புளியன்குளம் சசிகுமாா்(45) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். நெல்சன், கணேசன் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய நான்குனேரி, தென்னிமலை, நெடுங்குளம், நம்பிநகா் பகுதியைச் சோ்ந்த கண்ணன் (21), அந்தோணி மைக்கேல் (18), சுப்பையா என்ற சுபாஷ் (19), கல்யாணி (19), உச்சிமகாளி என்ற மிட்டாய் (20), வசந்தகுமாா் (21), ராஜா (19) ஆகிய 7 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.

இந்த நிலையில், கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சுபாஷ், கல்யாணி ஆகிய இருவரும் கடந்த 2023-இல் நான்குனேரி, பெருந்தெருவைச் சோ்ந்த மாணவா் சின்னதுரை மீது சாதிய வன்ம தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்கள் என்பதும், நான்குனேரி-மூலக்கரைப்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியிடம் நகை பறித்த வழக்கில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரியவந்தது. இரட்டைக் கொலை வழக்கில் கைதான 7 பேரும் 18 முதல் 21 வயதுக்குள்பட்டவா்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →