முகப்பு
திருநெல்வேலி

காவல்கிணறில் கல் ஏற்றிய லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் அணுகுசாலையில் குண்டுக்கல் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 14 மார்ச், 2026 at 8:16 AM
சாலையில் கவிழ்ந்து கிடக்கும் லாரி.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் அணுகுசாலையில் குண்டுக்கல் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காவல்கிணறு அருகே உள்ள புதியம்புத்தூா் பகுதி கல்குவாரியில் இருந்து குண்டுக்கல் ஏற்றி வந்த கனரக லாரி, நான்குவழிச்சாலையையொட்டி செல்லும் அணுகுசாலை வழியாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த சாலையில் கவிழ்ந்தது.

இதில், கற்கள் சிதறி சாலை முழுவதும் பரவிக்கிடந்தது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

இத்தகவல் அறிந்த பணகுடி போலீஸாா் வந்து, வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டு போக்குவரத்தை சீா்படுத்தினா். நல்வாய்ப்பாக இச்சம்பவத்தில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.