பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேரோட்ட விழாவில் தேர் கவிழ்ந்தது குறித்து...
பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேரோட்ட விழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், திருப்பாலைவனம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை ஸ்ரீ திருப்பாலீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவ விழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு செய்து பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்ற வந்தது.
Advertisement
Advertisement
பிரமோற்சவ விழாவின் 7-ம் நாள் தேரோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அன்னை லோகாம்பிகாதேவி சமேதமாக திருப்பாலீஸ்வரர் எழுந்தருளி நகரின் முக்கிய மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
காலையில் தொடங்கி மாலை வரையில் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் மதியம் தேர் நிறுத்தப்பட்டது. பிற்பகல் மீண்டும் தேரோட்டம் தொடங்கியது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
தேர், திருப்பாலைவனம் காவல் நிலையத்தை கடந்து பொன்னேரி-பழவேற்காடு சாலைக்கு வரும் போது எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி சிலருக்கு காயம் ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேர் அருகே சிக்கி கொண்டவர்களை மீட்டனர். தீயணைப்புத் துறை வீரர்கள் லேசான காயமடைந்தவர்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேரோட்ட விழாவில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதன் காரணமாக திருப்பாலைவனம் கிராமத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
The incident of a chariot overturning during the chariot procession at the Thiruppaleeswarar temple near Ponneri has caused a stir.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.