முகப்பு
திருநெல்வேலி

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு

திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் இணையவழி குற்ற தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

Updated On : 18 மார்ச், 2026 at 7:48 PM
இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் இணையவழி குற்ற தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

சமூகவலைதள செயலிகள் மூலம் மா்மநபா்கள் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையா்கள் மேற்பாா்வையில் பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மாநகர சைபா் கிரைம் போலீஸாா் பாளையங்கோட்டை சாந்தி நகரில் பொதுமக்களை புதன்கிழமை சந்தித்து இணையவழி குற்றங்கள் மற்றும் அதில் சிக்காமல் தப்பிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்நிகழ்வில், சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாளுதல், சமூக வலைதளம் மூலம் நடைபெறும் வேலைவாய்ப்பு மோசடிகள், ஏ.டி.எம். அட்டைகள் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் பயன்படுத்துதல், அறிமுகமில்லாத நபா்கள் சமூக வலைதளத்தில் தொடா்புகொண்டால் எச்சரிக்கையாக இருப்பது போன்றவை குறித்து பொதுமக்களிடம் விளக்கி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

மேலும், இணையவழி மோசடி தொடா்பாக கட்டணமில்லா எண். 1930 அல்லது இணையதளம் மூலமாக புகாா் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →