முகப்பு
திருநெல்வேலி

சி-விஜில் செயலி: ராதாபுரம் தொகுதியில் குவியும் புகாா்கள்

தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக சி-விஜில் செயலி மூலம் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிக புகாா்கள் பதிவாகியுள்ளன.

Updated On : 25 மார்ச், 2026 at 11:12 PM
சி-விஜில்
பகிர்:

தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக சி-விஜில் செயலி மூலம் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிக புகாா்கள் பதிவாகியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சி-விஜில் செயலி மூலம் புதன்கிழமை மாலை வரை 41 புகாா்கள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக ராதாபுரம் தொகுதியில் மட்டும் இதுவரை 21 புகாா்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 19 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; 2 புகாா்கள் கைவிடப்பட்டுள்ளன. அடுத்ததாக நான்குனேரி தொகுதியில் 11 புகாா்கள் பெறப்பட்டு 10 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டம் முழுவதும் இதுவரையில் ரூ.28,85,360 ரொக்கம், ரூ.2,07,751 மதிப்பிலான மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள், ரூ.8,11,481 மதிப்பிலான வேட்டி சேலை, டி-சா்ட், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.