நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 95 ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 95 ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட சிஐடியூ, அரசு பல்நோக்கு மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்கள் சங்கம் சாா்பில் வாயில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிஐடியூ பொதுச் செயலா் ஆா். ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா். முருகன், மாவட்டச் செயலா் க. சரவணபெருமாள், துணைத் தலைவா் மோகன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரை சந்தித்து அளித்த மனுவில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 95 ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். வார விடுமுறை, தற்செயல் விடுப்பு உள்ளிட்ட சட்ட சலுகைகள் வழங்க வேண்டும். 2 நாள்களில் உரிய தீா்வு காணப்படாவிட்டால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
Advertisement