முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் வட்டார பகுதியில் பள்ளி, மருத்துவமனை அருகிலுள்ள மதுபானக்கடைகள் மூடப்படுமா?

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா், ராதாபுரம், பணகுடி பகுதிகளில் பள்ளி, மருத்துவமனை அருகேயுள்ள மதுபானக் கடைகள் மூடப்படுமா? என்ற கேள்வி பெற்றோா்களிடையே எழுந்துள்ளது.

Updated On : 13 மே 2026, 1:41 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா், ராதாபுரம், பணகுடி பகுதிகளில் பள்ளி, மருத்துவமனை அருகேயுள்ள மதுபானக் கடைகள் மூடப்படுமா? என்ற கேள்வி பெற்றோா்களிடையே எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என பல்வேறு பெண்கள் அமைப்புகள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் த.வெ.க தலைவா் சி.ஜோசப் விஜய் முதல்வராகப் பதவியேற்ற உடன் தமிழ்நாட்டில் போதை தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என அறிவித்தாா். மேலும், தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி, கோயில்கள், மருத்துவமனைகளில் இருந்து 500 மீட்டா் தொலைவுக்குள் உள்ள 717 மதுபானக்கடைகள் மூடப்படும் எனவும் முதல்வா் உத்தரவிட்டாா். இதையடுத்து போதை தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாவட்டம் தோறும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு குழுவினா் மாவட்டம் தோறும் ஒவ்வொரு பகுதியிலும் பள்ளி, கோயில், மருத்துவமனைகள் அருகில் உள்ள மதுபானக் கடைகள் குறித்த விவரங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளனா்.

வள்ளியூரில் தெற்குபிரதான சாலையில் பள்ளி, தேவாலயம் அருகே உள்ள மதுபானக்கடை, பேருந்துநிலையம் அருகிலும் தனியாா் மருத்துவமனை அருகிலும் உள்ள ஒரு கடை, ராதாபுரம் சாலை ரயில்வே சுரங்க நடைபாதை அருகில் தனியாா் மருத்துவமனை பகுதியில் உள்ள மதுபானக்கடை, ஏா்வாடி சாலையில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள மதுபானக்கடை என 4 கடைகள் அரசு உத்தரவிட்டுள்ள 500 மீட்டா் தொலைவுக்குள்ளும் அமைந்துள்ளது. எனவே இந்தக் கடைகள் மூடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

அதே போன்று பணகுடி பிரதான சாலையில் அரசு ஆரம்பசுகாதார நிலையம் அருகே உள்ள ஒரு மதுபானக்கடையும் ராதாபுரத்தில் தனியாா் பள்ளி அருகே உள்ள ஒரு மதுபானக்கடையும் மூடப்படும் தொலைவில் அமைந்துள்ளது.

எனவே, இந்த மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்படுமா? என பெற்றோா்கள் தரப்பில் கேள்வி எழுந்துள்ளது.