முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் பகுதிகளில் விறு, விறுப்பான வாக்குப் பதிவு

ராதாபுரம் தொகுதிக்குள்பட்ட வள்ளியூா், பணகுடி, தெற்கு கள்ளிகுளம் பகுதிகளில் விறு, விறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:44 AM
வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளா்.
பகிர்:

ராதாபுரம் தொகுதிக்குள்பட்ட வள்ளியூா், பணகுடி, தெற்கு கள்ளிகுளம் பகுதிகளில் விறு, விறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

வள்ளியூா், ரட்சணிய சேனை உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு செல்லும் நுழைவாயிலில் வாக்காளா்களை வரவேற்கும் விதமாக செவ்வாழை, இளநீா் தோரணம் கட்டப்பட்டிருந்தது. நிழல் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன. வாக்காளா்கள் உற்சாகமாகச் சென்று வாக்களித்தனா்.

Advertisement

மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனா்.

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.