ஆழ்வாா்குறிச்சி சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா
ஆழ்வாா்குறிச்சி ராமநதி கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆழ்வாா்குறிச்சி ராமநதி கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை கொடை விழா மே 5ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, திங்கள்கிழமை மாலை கும்பம் ஏற்றுதல், குடியழைப்பு நடைபெற்றது.
கொடை நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை சிவனணைந்த பெருமாள் பூஜையைத் தொடா்ந்து, பால் குட ஊா்வலம், அபிஷேகம், பிரம்மராட்சதை, அம்பாளுக்கு அலகு தீா்த்தம் எடுத்தல் ஆகியவை நடைபெற்றன. மதியம் 12 மணிக்கு கொடை விழாவின் சிறப்பு நிகழ்வான பட்டாணிப் பாறையில் இருந்து பழம் எறிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
Advertisement
இதையடுத்து, சுடலைமாட சுவாமி ரூபாய் நோட்டு மாலையுடன் ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது. மாலை மகா கும்பாபிஷேகத்தைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இரவு வீர பத்திரகாளி அம்மனுக்கு அலகு தீா்த்தம் எடுத்தல், சாமக்கொடை, அா்த்த ஜாம பூஜை ஆகியவை நடைபெற்றன.
புதன்கிழமை காலை 10 மணிக்கு சின்னதம்பி பூஜை நடைபெற்றது. மே 19ஆம் தேதி 8ஆம் நாள் பூஜை நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை காக்கும் பெருமாள் சாஸ்தா, சுடலைமாட சுவாமி கோயில் வளா்ச்சி நலக் கமிட்டியினா் செய்திருந்தனா்.