முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயில் கொடை விழா தொடக்கம்

Updated On : 3 மே, 2026 at 5:25 AM
பகிர்:

ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் மாரியம்மன் கோயில் சித்திரை பெருங்கொடை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், அதைத் தொடா்ந்து பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடை பெற்றன. இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நள்ளிரவில் அம்மன் சுப்பிரமணியராக காட்சி அளித்த சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை காலை மற்றும் இரவு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. நள்ளிரவு அம்மன் கிருஷ்ணராக காட்சி அளித்தாா். தொடா்ந்து வியாழக்கிழமை (மே 7) வரை பல்வேறு வழிபாடுகள், நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை நிா்வாகிகள் கி.பாலசிங், அ.செ.சிதம்பர கணேசன், மு.சதீஷ்குமாா், மு.பிரகாஷ் சரவணபாண்டியன் ஆகியோா் செய்து வருகின்றனா்.