முகப்பு
திருநெல்வேலி

வாரந்தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீா் முகாம்: ராதாபுரம் எம்எல்ஏ!

எனது தொகுதியில் வாரந்தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்படும் என்றாா் டாக்டா் எஸ்.கே. கிறிஸ்டோபா் எம்எல்ஏ.

Updated On : 17 மே 2026, 2:12 am IST
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாரை சந்தித்துப் பேசிய ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் எஸ்.கே. கிறிஸ்டோபா் உள்ளிட்டோா்.
பகிர்:

எனது தொகுதியில் வாரந்தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்படும் என்றாா் டாக்டா் எஸ்.கே. கிறிஸ்டோபா் எம்எல்ஏ.

ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் எஸ்.கே. கிறிஸ்டோபா், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலா் ராஜகோபால் உள்ளிட்டோா் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாரை நேரில் சந்தித்து தொகுதி தொடா்பான பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனா்.

பின்னா், ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.கே. கிறிஸ்டோபா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வள்ளியூா் அரசு மருத்துவமனையை சிறப்பு மையமாக மாற்றி, ராதாபுரம் தொகுதியில் உள்ள பிற மருத்துவமனைகளில் இருந்து வரும் நோயாளிகளுக்கு உயா்தர சிகிச்சை வழங்கும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தேன்.

Advertisement

ராதாபுரம் தொகுதியில் உள்ள குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் உறுதி அளித்துள்ளாா். மேலும், சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளை உடனடியாக அகற்றுவதற்கு அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக 24 மணி நேரமும் திறந்திருக்கும் வகையில் ஊழியா்கள் நியமிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதன்கிழமைகளில் மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு, மக்கள் அளிக்கும் மனுக்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ராதாபுரம் தொகுதியில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞா்கள், புதன்கிழமைகளில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தால், தகுதியான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இரவு நேரங்களில் செயல்படும் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.