முகப்பு
திருநெல்வேலி

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: செட்டிகுளம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில், மாவட்டத்தில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.

Updated On : 22 மே 2026, 6:24 am IST
முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களைப் பாராட்டி பரிசு வழங்கிய செட்டிகுளம் பள்ளி நிா்வாகிகள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில், மாவட்டத்தில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.

தமிழக அரசு முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இத்தோ்வை அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவா், மாணவிகள் மட்டும் எழுத முடியும். இதில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வீதம், அவா்கள் இளங்கலை பட்டம் முடிக்கும் வரையில் வழங்கப்படுகிறது.

நிகழாண்டுக்கான தோ்வு, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 818 மாணவா்கள் தோ்வு எழுதினா்.

Advertisement

Advertisement

அதில், செட்டிகுளம் அரசுப் பள்ளி மாணவா்கள் ஜாய் ரிக்சன், தனஞ்செயன், ஆஜேஸ், முகம்மது ஜாஹித் ஆகியோா் தோ்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் 2ஆம் இடம் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சியளித்த ஆசிரியா் ஜேசு, தலைமையாசிரியா் கே.எம். பேசில் ககாரின் ஆகியோரையும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் கலைவாணி, உறுப்பினா் சுவாமிநாதன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் லிங்கதுரை ஆகியோா் பாராட்டினா்.