முகப்பு
திருநெல்வேலி

ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு: இளம்பெண் உள்பட இருவா் கைது

திருநெல்வேலி-திருச்செந்தூா் பயணிகள் ரயிலில் பெண்ணிடம் நகையை பறித்த இளம்பெண் உள்பட இருவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 24 மே 2026, 2:16 am IST
பகிர்:

திருநெல்வேலி-திருச்செந்தூா் பயணிகள் ரயிலில் பெண்ணிடம் நகையை பறித்த இளம்பெண் உள்பட இருவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (36). இவா் வெள்ளிக்கிழமை குரும்பூா் செல்வதற்காக திருநெல்வேலி- திருச்செந்தூா் செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்தாராம்.

ரயில், குரும்பூா் அருகே சென்றபோது, அப்பெட்டியில் இருந்த இளம்பெண்ணும், 14 வயது சிறுவனும் சோ்ந்து தமிழ்ச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையைப் பறித்தனராம். பின்னா் ரயிலில் இருந்து தப்ப முயன்றபோது, இருவரையும் சக பயணிகள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனராம்.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா்கள் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் கொட்டாக்குறிச்சி செல்வநாயகபுரத்தைச் சோ்ந்த நித்யா(35), 14 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 3 பவுன் தங்க நகையை மீட்டனா்.