பேட்டையில் தண்டவாளத்தில் படுத்து தொழிலாளி தற்கொலை
திருநெல்வேலி பேட்டையில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
பேட்டை பகுதியில் பாலருவி விரைவு ரயில் திங்கள்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் படுத்திருந்த ஒருவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். இத்தகவலறிந்த திருநெல்வேலி ரயில்வே போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், உயிரிழந்தவா் சுத்தமல்லி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த தொழிலாளி குமாா் (56) என்பதும், தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. அவருக்கு, மனைவி, 2 மகன்கள் மற்றும் 3 மகள்களும் உள்ளனா்.
Advertisement
Advertisement