தமிழ் முழக்கப் பேரவை நிகழ்ச்சி
தமிழ் முழக்கப் பேரவையின் 190 ஆவது நிகழ்ச்சி பாளையங்கோட்டை சைவ சபையில் அண்மையில் நடைபெற்றது.
தமிழ் முழக்கப் பேரவையின் 190 ஆவது நிகழ்ச்சி பாளையங்கோட்டை சைவ சபையில் அண்மையில் நடைபெற்றது.
தேசிய நல்லாசிரியா் செல்லப்பா தலைமை வகித்தாா். பேரவையின் செயலா் நசீா் முன்னிலை வகித்தாா். தமிழ் ஆய்வாளா் மு.சி. பூரணலிங்கம், புனித யோவான் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறை பேராசிரியா் மாணிக்கம், அயோத்திதாச பண்டிதா் குறித்து முனைவா் பிரேமலதாவும், அவிநாசிலிங்கம் செட்டியாா் குறித்து உதவிப் பேராசிரியை தமிழ்ச்செல்வியும் உரையாற்றினா். பேராசிரியா்கள் சுதாகா், ஆறுமுகம், மகாலட்சுமி, சேரை பாலகிருஷ்ணன், திரிபுரசுந்தரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.