முகப்பு
தூத்துக்குடி

டிரக்கரிலிருந்து விழுந்து மாணவர் காயம்

சாத்தான்குளம் அருகே வெள்ளிக்கிழமை டிரக்கரில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலத்த காயமடைந்தார்.

தூத்துக்குடி

டிரக்கரிலிருந்து விழுந்து மாணவர் காயம்

சாத்தான்குளம் அருகே வெள்ளிக்கிழமை டிரக்கரில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலத்த காயமடைந்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே வெள்ளிக்கிழமை டிரக்கரில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலத்த காயமடைந்தார்.

திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டனம் பிரசாந்த் நகரைச் சேர்ந்தவர் வ.சரவணன் (22). இவர், சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறாராம்.

வெள்ளிக்கிழமை கல்லூரி முடிந்ததும் ஊருக்குச் செல்வதற்காக, திசையன்விளையிலிருந்து உடன்குடி சென்ற டிரக்கரில் ஏறினாராம்.

அதில் கூட்டம் அதிகமாக இருந்ததால், டிரக்கரின் பின்புறம் நின்றபடி அவர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தட்டார்மடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து டிரக்கர் ஓட்டுநரான திசையன்விளையைச் சேர்ந்த கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →