தூத்துக்குடி

தண்டுபத்து கோயில்களில் ஆடி மாத பால்முறைத் திருவிழா தொடக்கம்

DIN

உடன்குடி சந்தையடியூர் மற்றும் தண்டுபத்து அய்யா நாராயண சுவாமி கோயில்களி ல் ஆடி மாத பால்முறைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12  மணிக்கு உச்சிக்காலம் போதிப்பு, மாலை  6 மணிக்கு அய்யா அன்ன வாகனத்தில் பவனி ஆகியவை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு அய்யா சர்ப்ப வாகனத்தில் பவனி, தர்ம பிச்சை எடுத்தல், சந்தனக்குடம் நேமிசம் எடுத்தல், இரவு 1 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பவனி ஆகியவை நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை காலையில் உம்பான் தர்மம் வழங் கல், மாலையில் அய்யா கருட வாகனத்தில் பவனி, புதன்கிழமை காலையில் திருவிளக்கு வழிபாடு, மாலையி ல் அனுமார் வாகனத்தில் பவனி, வியாழக்கிழமை காலையில் பால்வைத்தல், தொடர்ந்து அய்யா பூச்சப்பரத் தில் பவனி, இரவு 8 மணிக்கு இன்னிசை ஆகியவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக்குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT